செய்திகள்

எந்த அணியையும் இந்தியா துவம்சம் செய்யும்: ஷிகர் தவன்

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், பஞ்சாப்பில் நடந்த 2-ஆவது ஒருநாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும் அபார வெற்றியைப் பதிவு செய்தன.

இந்நிலையில், இந்தத் தொடரை நிர்ணயிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொல்கத்தா மற்றும் தரம்சாலாவில் நடந்த போட்டிகளில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். எப்போதும் போன்று அந்தப் போட்டிகளிலும் நேர்மறையான எண்ணங்களுடன் மட்டுமே களமிறங்கினோம். சில நேரங்களில் சரிவுகள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.

இதுபோன்ற சூழ்நிலைகள் பழக்கப்பட்டவைதான். இந்திய அணி மிகப் பலம் வாய்ந்த அணி. வீரர்கள் அனைவரும் முழு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் ஒரே மாதிரியான மனநிலையுடன் தான் களமிறங்குகிறோம். 

இந்திய அணிக்கென்று தனித்தன்மை உள்ளது. வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு பழகிவிட்டால் பிறகு எந்த ஒரு அணியாக இருந்தாலும் துவம்சம் செய்து எளிதில் வெற்றிபெற்று விடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT