முகப்பு
செய்திகள்

டிராஃபிக்கில் சிக்கிய விதர்பா அணி: ரஞ்சி கோப்பை அரையிறுதி தாமதம்

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தாமதமாகத் தொடங்கியது.

Updated On : 17 டிசம்பர், 2017 at 11:27 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:52 PM

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 

இப்போட்டியில் கர்நாடகா மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும், ரஞ்சி அரையிறுதி வரை விதர்பா அணி முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.

இந்நிலையில், விதர்பா அணிக்கு எதிர்பாரா விதமாக நேர்ந்த சிக்கல் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகத் துவங்கியது.

Advertisement

கொல்கத்தாவில் 25கே என்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிறுக்கிழமை காலை தொடங்கியது. இதன்காரணமாக ஓட்டலில் இருந்து கிளம்பிய விதர்பா அணியின் வாகனம் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டது.

எனவே அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்கு சென்றடைய முடியவில்லை. மேலும் காலை 8.40 மணியளவில் மட்டுமே மைதானத்துக்கு சென்றடைந்தனர்.

இதையடுத்து, காலை 8.30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி அரைமணி நேரம் தாமதமாக காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.