செய்திகள்

இந்தியா ஜாக்கிரதை! டெஸ்ட் அணிக்குத் திரும்பிய டி வில்லியர்ஸ், ஸ்டெய்ன்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இருவரும் இடம்பிடித்துள்ளார்கள்...

எழில்

2016 ஜனவரிக்குப் பிறகு டிவில்லியர்ஸ் எந்த டெஸ்டும் விளையாடவில்லை. கடந்த வருட நவம்பருக்குப் பிறகு டேல் ஸ்டெய்னும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகிவிட்டார்கள். அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இருவரும் இடம்பிடித்துள்ளார்கள்.

டிசம்பர் 26 அன்று தொடங்கவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டுபிளெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் மார்னே மார்கல், பிளாண்டர், ரபடா ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என தென்னாப்பிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் விளையாடவுள்ளார்கள். இதனால் முக்கியமான தொடருக்குச் சரியான முறையில் தயாராகிவருகிறது தெ.ஆ. அணி. 

தெ.ஆ. அணி: டுபிளெஸ்ஸி (கேப்டன்), ஆம்லா, பவுமா, குயிண்டன் டி காக், புருயின், டி வில்லியர்ஸ், எல்கர், கேசவ் மஹாராஜா, மர்க்ரம், மார்னே மார்கல், ஆண்டில், பிளாண்டர், ரபடா, ஸ்டெய்ன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT