முகப்பு
செய்திகள்

பேசாமல் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேசிப்பாருங்கள்: எதிரணிகளுக்கு அஸ்வின் யோசனை!

களமிறங்கும்போதெல்லாம் பெரிதளவில் ரன்கள் குவிக்கிறார். இதை முன்வைத்து இந்திய வீரர் அஸ்வின் குறும்பாக ட்விட்டரில் கூறியதாவது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:26 PM
பகிர்:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது. 

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார். 141*, 40,6, 239, 65* என களமிறங்கும்போதெல்லாம் பெரிதளவில் ரன்கள் குவிக்கிறார். இதை முன்வைத்து இந்திய வீரர் அஸ்வின் குறும்பாக ட்விட்டரில் கூறியதாவது:

டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னால் அணிகள் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய நிலை ஒருநாள் உருவாகலாம். அப்போது இரு தரப்புக்கும் ஏற்றாற்போல ஒரு ஸ்கோரை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையும் உருவாகலாம். நம்பமுடியாத ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →