செய்திகள்

சென்னை திரும்பிய அஸ்வின்: புதிரான ட்வீட்டால் கவலையடைந்துள்ள ரசிகர்கள்!

பல சந்தேகங்களை அந்த ட்வீட் உருவாக்கியதால் பிறகு அதை நீக்கிவிட்டார் அஸ்வின்... 

எழில்

மோசமான நாள். வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஊரிலிருந்து கிளம்பியபிறகு நடந்த சில விஷயங்கள் சரியில்லை. பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை அவர் வெளியிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளார்கள்.

அஸ்வினின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருந்த அஸ்வின், சென்னைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் பல சந்தேகங்களை அந்த ட்வீட் உருவாக்கியதால் பிறகு அதை நீக்கிவிட்டார் அஸ்வின். 

தென் ஆப்பிரிக்காவுக்கு இன்று புறப்படும் இந்திய அணி அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் தொடரால் முடங்கிய நெட்பிளிக்ஸ்!

இந்த வார ஓடிடி படங்கள்!

புல்லட் ரயிலுக்கு இப்போதே டிக்கெட் எடுக்கலாம்! அஸ்வினி வைஷ்ணவ்

புத்தாண்டு: சற்றே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!

கடைசி ஆஷஸ் டெஸ்ட் : ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸி. அணி!

SCROLL FOR NEXT