முகப்பு
செய்திகள்

பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி: சேவாக், அக்தர், பிராவோ, காலிஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

பனிக்கட்டி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு சேவாக், அக்தர், பிராவோ, காலிஸ் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய அணி விவரம் வெளியிடப்பட்டது.

Updated On : 27 டிசம்பர், 2017 at 7:03 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:57 PM

சுவிட்சர்லாந்தில் புதிய முயற்சியாக பனிக்கட்டியால் ஆன மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது.

செயின்ட். மோரிட்ஸ் என்ற இடத்தில் பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிதகளில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. 

இந்த தொடருக்குப் பின் பனிக்கட்டியில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் மவுசு அதிகரிக்கும். இந்த தொடரின் மூலம் நாங்கள் சாதனை படைக்கப் போகிறோம் என்று விஜே ஸ்போர்ட்ஸ் தலைமை அதிகாரி விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். டைமண்ட்ஸ் மற்றும் ராயல்ஸ் என்று இரு அணிகளுக்கும்
பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது வரை விரேந்திர சேவாக், பிராவோ, ரசாக் அப்ரிடி, அக்தர், கைஃப், ஜெயவர்தனே, மலிங்கா, மைக்கெல் ஹஸ்ஸி, கிரீம் ஸ்மித், காலிஸ், வெட்டோரி, மெக்கல்லம், இலியாட், பனேஸார், ஓவைஸ் ஷா உள்ளிட்ட வீரர்கள் இதில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.