ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: தில்லி-விதர்பா மோதல் இன்று தொடக்கம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ரஞ்சி கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்துக்கு விதர்பா அணி முன்னேறியிருப்பது இது முதல் முறையாகும். மறுபுறம், தில்லி அணி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்ற களம் காண்கிறது. எனினும், விதர்பா அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றுவதற்கு தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்று தில்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
தில்லி அணி பேட்டிங்கை பொருத்த வரையில், கம்பீருடன் இணையும் குணால் சந்தேலா, தொடக்க ஆர்டரில் பலம் சேர்க்கிறார். மிடில் ஆர்டரை நிதீஷ் ராணா கவனிக்க உள்ளார். பந்துவீச்சை பொருத்த வரையில் நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரோலியா, விகாஸ் மிஷ்ரா ஆகியோர் விதர்பாவின் விக்கெட்டுகளை சாய்க்க வருகின்றனர்.
விதர்பா அணியை கணக்கில் கொண்டால், கேப்டன் ஃபைஸ் ஃபாஸல்-சஞ்சய் ராமசாமி கூட்டணி அணிக்கு வலுவான தொடக்கத்தை தரும் என நம்பலாம். வாஸிம் ஜாஃபர், கணேஷ் சதீஷ் உள்ளிட்டோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சை பொருத்த வரையில் ரஜ்னேஷ் குர்பானி தில்லி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். ஆதித்யா சர்வதே, சித்தேஷ் நெரால் ஆகியோர் சிறப்பாக செயல்படலாம்.
அணிகள் விவரம் தில்லி
ரிஷப் பந்த் (கேப்டன்), கெளதம் கம்பீர், குணால் சந்தேலா, துருவ் ஷோரே, நிதீஷ் ராணா, ஹிம்மத் சிங், மனன் சர்மா, விகாஸ் மிஷ்ரா, விகாஸ் டோகாஸ், நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரோலியா, ஆகாஷ் சுதன், சிவம் சர்மா, உன்முக்த் சந்த், மிலிந்த் குமார்.
விதர்பா ஃபைஸ் ஃபாஸல் (கேப்டன்), சஞ்சய் ராமசாமி, வாஸிம் ஜாஃபர், கணேஷ் சதீஷ், அபூர்வ் வான்கடே, வினோத் வத்கர், ஆதித்யா சர்வதே, அக்ஷய் வகாரே, சித்தேஷ் நெரால், ரஜ்னேஷ் குர்பானி, கரன் சர்மா, ஸ்ரீவாஸ்தவா, சித்தேஷ் வத், அக்ஷய் கர்னேவர், சுனிகெத் பிங்கேவர், ரவிகுமார் தாகுர், ஆதித்யா தாக்கரே.