டி20: நியூஸிலாந்து 187 ரன்கள் குவிப்பு!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 187 ரன்கள் குவித்துள்ளது...
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 187 ரன்கள் குவித்துள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்தாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் டி20 தொடரை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அந்தளவுக்கு டி20 கிரிக்கெட்டில் பலமான அணியாக உள்ளது. இந்நிலையில் நெல்சனில் இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மன்ரோ, பிலிப்ஸ் ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். மன்ரோ 53, பிலிப்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இருவரும் தலா 2 சிக்ஸர் அடித்தார்கள். கடைசிக்கட்டத்தில் டெய்லர், சாண்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் நியூஸிலாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது.
கடினமான இலக்கை எதிர்கொண்டுள்ள மே.இ. அணி 15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.