மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்ததன் மூலம் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றை உறுதி செய்தது.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்களில் 67 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 19 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் இக்தா பிஸ்தா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 22.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 29 ரன்களும், ஹர்மான்பிரீத் கெளர் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.