செய்திகள்

பாட்மிண்டன் தரவரிசை: சமீர் 11 இடங்கள் முன்னேற்றம்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சமீர் வர்மா 11 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

DIN

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சமீர் வர்மா 11 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சமீர் வர்மா, இப்போது தரவரிசையிலும் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அஜய் ஜெயராம் அதிகபட்சமாக 19-ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக எச்.எஸ்.பிரணாய்
21-ஆவது இடத்தில் இருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 10-ஆவது இடத்தில் உள்ளார். பி.வி.சிந்து தொடர்ந்து 5-ஆவது இடத்தில் இருக்கிறார்.
கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 13-ஆவது இடத்திலும், ஆடவர் இரட்டையர் தரவரிசையில்
இந்தியாவின் மானு அத்ரி-
சுமீத் ரெட்டி ஜோடி 23-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

SCROLL FOR NEXT