செய்திகள்

பிசிசிஐ உடனான விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ஸ்டார் இந்தியா!

இந்திய கிரிக்கெட்டில் நிலவும் தெளிவற்ற சூழலில், மீண்டும் ஒப்பந்தம் கோரவேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

எழில்

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனவரி 1 2014 முதல் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ சீருடை விளம்பரதாரராக இருந்து வந்தது ஸ்டார் இந்தியா நிறுவனம். இதனால் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் சின்னம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி, ஆண்கள் ஏ அணி மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆகிய அணி வீரர்களின் சீருடைகளில் இடம் பெற்றது. இதன் ஒப்பந்தக் காலம் மார்ச் 2017 வரை மட்டுமே உள்ளது. இந்நிலையில் பிசிசிஐயுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது ஸ்டார் இந்தியா நிறுவனம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி உதய் சங்கர் கூறும்போது: இந்திய அணியின் சீருடையில் எங்கள் நிறுவனத்தின் பெயர் இருந்தது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் நிலவும் தெளிவற்ற சூழலில், மீண்டும் ஒப்பந்தம் கோரவேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். பிசிசிஐ கோரும் உறுதிமொழிகள் எல்லாம் கடினமானவையாக உள்ளன. பல விஷயங்களில் ஐசிசிக்கும் பிசிசிஐக்கும் இடையே தெளிவான புரிதல்கள் இல்லை. எனவே இந்த முடிவை எடுக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். 

பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்கு முன்பு 12 வருட காலம் சஹாரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்தது. இப்போது ஸ்டார் இந்தியா நிறுவனம் விலகியுள்ளதால் புதிய ஏலம் கோரப்படும். அதில் தேர்வாகும் நிறுவனத்தின் சின்னம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி, ஆண்கள் ஏ அணி மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆகிய அணி வீரர்களின் சீருடைகளில் இடம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT