செய்திகள்

பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடர்: சென்னை அணி சாம்பியன்

புதுதில்லி சிரி போர்ட் மைதானத்தில் நேற்று இரவு  நடந்த பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடரின்  இறுதி போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ...

DIN

புதுதில்லி: புதுதில்லி சிரி போர்ட் மைதானத்தில் நேற்று இரவு  நடந்த பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடரின்  இறுதி போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி பிரிமியர் பேட்மிண்டன் லீக் சாம்பியன் பட்டம் வென்றது. 

இரண்டாவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) திருவிழா கடந்த ஜனவரி 1–ந்தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வந்தது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், லக்னோ அவாத் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேர் உள்பட மொத்தம் 60 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டனர்.

இந்த தொடரின் இறுதிப் போட்டி புதுடெல்லியில் உள்ள சிரி போர்ட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. பரபரப்பான போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான  சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி பிரிமியர் பேட்மிண்டன் லீக் சாம்பியன் பட்டம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT