முகப்பு
செய்திகள்

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழக அரசு வேலை!

தனக்கு அரசுப் பணியை வழங்கி ஊக்கப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு மின்வாரியத்தில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.  

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவர் ஸ்குவாஷ் வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா. சமீபத்தில் முதல்வரைச் சந்தித்துத் தனக்கு அரசுப் பணியை வழங்கி ஊக்கப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். 

அதன் அடிப்படையில், அவருடைய கோரிக்கையை ஏற்று அரசு வேலையை வழங்கியுள்ளது தமிழக அரசு. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை ஜோஸ்னாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.