செய்திகள்

இலங்கை டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல்

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன்

DIN

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தவன் சேர்க்கப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

காஸாவில் செய்தியாளா்கள் கொல்லப்படுவது அதிா்ச்சி- வெளியுறவு அமைச்சகம்

SCROLL FOR NEXT