முகப்பு
செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி: நியூஸிலாந்து பேட்டிங்!

கார்டிஃப்பில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன.

Updated On : 9 ஜூன், 2017 at 4:35 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:12 PM

கார்டிஃப்பில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடி தலா ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். இதில் வெல்லும் அணியின் அரையிறுதி வாய்ப்பு, ஆஸ்திரேலியாவின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே அமையும்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.