செய்திகள்

ஆப்கானிஸ்தானிடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எழில்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் போட்டியிடுகின்றன. செயிண்ட் லுசியாவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க வீரர் ஜாவத் அஹ்மதி 81 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 18 வயது லெக் ஸ்பின்னர் ரஷித் கான் பிரமாதமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது நான்காவது சிறப்பு பந்துவீச்சாகும். 

ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளை மட்டுமே வெற்றி கண்ட ஆப்கானிஸ்தான் அணி, முதல்முறையாக ஒரு பெரிய அணியை ஒருநாள் போட்டியில் வெற்றி கண்டுள்ளது.

ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT