பிரெஞ்சு ஓபன்: இறுதிச்சுற்றில் நடால் - வாவ்ரிங்கா மோதல்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், வாவ்ரிங்கா ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் நடால் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் டொமினிக் தீமை வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-7 (6), 6-3, 5-7, 7-6 (3), 6-1 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவை வீழ்த்தினார்.
Advertisement
இதையடுத்து இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார் நடால்.