மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, பூம்ரா ஆகிய இருவரும் இந்த அணியில் இடம்பெறவில்லை.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரிஷப் பந்த், ரஹானே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.