செய்திகள்

கும்ப்ளே ராஜிநாமா: கடும் விமரிசனங்களைச் சந்திக்கும் கோலி!

சமூகவலைத்தளத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாகவும் கோலிக்கு எதிரான கருத்துகளையும் கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என...

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளதை பிசிசிஐ உறுதி செய்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். இந்திய அணிக்கான அடுத்த தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ செயல்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்படுகிறார் என்று பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனில் கும்ப்ளேவும் தனது அறிக்கையில், கோலியுடனான கருத்துவேறுபாடுகளால் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் கும்ப்ளேவின் விலகலை அடுத்து சமூகவலைத்தளத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாகவும் கோலிக்கு எதிரான கருத்துகளையும் கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் தெரிவித்துவருகிறார்கள். அதன் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT