செய்திகள்

உலக ஹாக்கி லீக்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

DIN

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 முதல் 8-ஆவது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 5 முதல் 8-ஆவது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 8-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ரமன்தீப் சிங் அடித்தார்.
அதைத் தொடர்ந்து 12 மற்றும் 27-ஆவது நிமிடங்களில் ஆகாஷ்தீப் சிங் கோலடிக்க, 28-ஆவது நிமிடத்தில் ரமன்தீப் சிங் தனது 2-ஆவது கோலை அடித்தார். இதனால் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய அணி, ஹர்மான்பிரீத் மூலம் 36-ஆவது நிமிடத்தில் 5-ஆவது கோலை அடித்தது. அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய பாகிஸ்தான் அணி 41-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இதன்பிறகு 59-ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங் கோலடிக்க, இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த ஹாக்கி தொடரின் குரூப் சுற்றில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி, இப்போது 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 5 மற்றும் 6-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், கனடாவும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT