செய்திகள்

ஏடிபி தரவரிசை: 6-ஆவது இடத்தில் சிலிச்

DIN

சர்வதேச டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் குரோஷியாவின் மரின் சிலிச் 7-ஆவது இடத்திலிருந்து 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறியதன் மூலம் சிலிச் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார்.
பிரிட்டனின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் முறையே 2, 3, 4 மற்றும் 5-ஆவது இடங்களில் உள்ளனர்.
மரின் சிலிச் 6-ஆவது இடத்திலும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஓர் இடத்தை இழந்து 7-ஆவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா ஆகியோர் முறையே 8, 9 மற்றும் 10-ஆவது இடங்களில் உள்ளனர்.
கிவிட்டோவா முன்னேற்றம்: மகளிர் தரவரிசையைப் பொறுத்தவரையில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இடது கை வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா, கடந்த டிசம்பரில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் இடது கையில் பலத்த காயமடைந்தார்.
அதிலிருந்து விரைவாக மீண்ட கிவிட்டோவா, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பர்மிங்காம் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தரவரிசையிலும் ஏற்றம் கண்டுள்ளார்.
ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடத்திலும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-ஆவது இடத்திலும் உள்ளனர். செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் முறையே 3, 4, 5-ஆவது இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT