செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை: முதல் முறையாக முதலிடத்தில் முர்ரே

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரரும், உலகின் முதல் நிலை வீரருமான ஆன்டி முர்ரே முதல் முறையாக போட்டித் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தப் போட்டிக்கான தரவரிசை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி, நடப்புச் சாம்பியனான ஆன்டி முர்ரே முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (2), ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (3), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (4), ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா (5) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து கனடாவின் மிலோஸ் ரயோனிச் (6), குரேஷியாவின் மிலோஸ் ரயோனிச் (7), ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (8), ஜப்பானின் கெய் நிஷிகோரி (9), ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ùஸவரெவ் (10) உள்ளனர்.
மகளிர் பிரிவு: இதனிடையே, மகளிர் பிரிவு தரவரிசையில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடத்தில் உள்ளார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-ஆவது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (4), டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கி (5), பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா (6), ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவா (7), ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா (8), போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா (9), அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (10) ஆகியோர் அவர்களுக்கு அடுத்த இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT