முகப்பு
செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி கிரிக்கெட் வீரர் டிவைன் ஸ்மித் ஓய்வு!

டிவைன் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 2 மார்ச், 2017 at 12:52 PM
பகிர்:

டிவைன் ஸ்மித் என்றால் அவருடைய அதிரடி சிக்ஸர்கள்தான் ஞாபகத்துக்கு வரும். எந்த ஒரு ஆட்டத்தையும் தன்னுடைய அதிரடியால் மாற்றக்கூடியவர். 

105 ஒருநாள் போட்டி, 33 டி20, 10 டெஸ்டுகளில் மேற்கிந்திய அணிக்காக விளையாடியுள்ள டிவைன் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வருகிறார். அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 2004-ல் டெஸ்டில் அறிமுகமான ஸ்மித், கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2015 உலகக் கோப்பையில் விளையாடினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.