இந்தியாவில் அதிவேக 200 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை!
இவ்வளவு குறைந்த டெஸ்டுகளில் வேறு எந்த வீரரும் இந்தியாவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை
இந்தியாவில் அஸ்வின் 30 டெஸ்டுகள் விளையாடியுள்ளார்.
பெங்களூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் மட்டும் அவர் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வளவு குறைந்த டெஸ்டுகளில் வேறு எந்த வீரரும் இந்தியாவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது கிடையாது. இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்ஸில் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வெளிநாடுகளில் விளையாடிய 17 டெஸ்டுகளில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.
Advertisement
ஒட்டுமொத்தமாக இதுவரை விளையாடிய 47 டெஸ்டுகளில் 269 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவற்றில் 202 விக்கெட்டுகளை இந்தியாவில் எடுத்துள்ளார்.