செய்திகள்

ஆஸி.: கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் உயர்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது.

தினமணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய ஊதிய உயர்வின்படி, சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஊதியமானது ரூ.7.32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, போட்டி ஊதியம், செயல்பாட்டு ஊக்கத் தொகை, பிக் பாஷ் லீக் போட்டிக்கான தொகை என அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
அதேபோல், உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான ஆண்டு ஊதியம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கான ஊதியம் சுமார் 125 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

SCROLL FOR NEXT