செய்திகள்

ஜடேஜாவைக் கொண்டாடவேண்டிய தருணம் இது!

எழில்

2016-17 சீஸனின் மகத்தான வீரர் ஜடேஜா தான்! ஏன் தெரியுமா?

இந்த சீஸனில் அஸ்வின் 6-வதாக ஆட ஆரம்பித்தபிறகு 8-வது வீரராகவே களமிறங்குகிறார் ஜடேஜா. அதாவது பெரும்பாலும் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிகிற வேளையில்தான் பேட்டிங் செய்ய வருவார். இந்த வாய்ப்பில் பேட்டிங்கில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்?

ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் தன் திறமையை நிரூபித்து இந்த சீஸனின் மகத்தான வீரராக ஆகியுள்ளார் ஜடேஜா.

2016-17 சீஸனில் ஜடேஜா 6 அரை சதங்கள் எடுத்துள்ளார். இந்த சீஸனில் அதிக அரை சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மற்ற வீரர்களுடன் இணைந்து 2-வது இடம் பிடித்துள்ளார். ஆம், 8-வதாகக் களமிறங்கும் வீரர்!

இந்த சீஸனில் புஜாரா 12 அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். அடுத்ததாக கோலி, விஜய், ஜடேஜா ஆகிய மூவரும் 6 அரை சதங்கள் எடுத்துள்ளார்கள். உண்மையில் இது மகத்தான சாதனை.

அஸ்வின், சாஹாவுக்குப் பிறகு களமிறங்கியும் அவ்விருவரை விடவும் ஏன் மற்ற முக்கியமான பேட்ஸ்மேன்களை விடவும் அதிக அரை சதங்கள் எடுத்து சாதித்துள்ளார் ஜடேஜா. 

அதுமட்டுமில்லாமல் இந்த சீஸனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 68 விக்கெட்டுகள் எடுத்து 2-வது இடம் பிடித்துள்ளார்.

ஜடேஜாவைக் கொண்டாடவேண்டிய தருணம் இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT