செய்திகள்

முத்தரப்புத் தொடர்: நியூஸிலாந்து வெற்றி

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது நியூஸிலாந்து.

DIN

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது நியூஸிலாந்து.
அயர்லாந்து தலைநகர் டுப்ளினில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. அந்த அணியில் செளம்ய சர்க்கார் 61, முஷ்பிகுர் ரஹிம் 55, மகமதுல்லா 51 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் பென்னட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் கேப்டன் டாம் லதாம் 54, ஜேம்ஸ் நீஷம் 52 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிஜுர் ரஹ்மான், ரூபெல் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜேம்ஸ் நீஷம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT