செய்திகள்

மகளிர் ஹாக்கி இந்தியாவுக்கு 4-ஆவது தோல்வி

DIN

ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் ஹாக்கித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.
இதன்மூலம் இந்தத் தொடரில் 4-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய நியூஸிலாந்து அணி 14, 17 மற்றும் 26-ஆவது நிமிடங்களில் கோலடித்து 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
நவ்ஜோத் கெளர் 100: இந்த ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 100 ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் இந்தியாவின் நவ்ஜோத் கெளர். 2012-இல் இதே நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான நவ்ஜோத், தற்போது இந்திய அணியின் மிட்பீல்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.
இது குறித்து ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் முஷ்டாக் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ்ஜோத் கெளர், திறமையான வீராங்கனை. அவர் தனது அபார ஆட்டத்தால் இந்திய அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். 100-ஆவது ஆட்டத்தில் விளையாடியிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள். வளர்ந்து வீராங்கனைகளுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT