செய்திகள்

முதல்முறையாக தேசிய பாட்மிண்டன் போட்டியில் மோதும் சிந்து - சாய்னா!

எழில்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த அனுரா பிரபுதேசாயை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 17-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் ருத்விகா ஷிவானியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

இதையடுத்து, பட்டம் வெல்லும் ஆட்டத்தில் சாய்னா-சிந்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதில் சாய்னா 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சிந்து 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசிய பாட்மிண்டனில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் இருவரும் இருமுறை மோதினாலும் தேசிய பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக இருவரும் மோதுவதால் இந்தப் போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் இருவரும் இருமுறை மோதி அதில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்றுள்ளார்கள். 

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-ஐ வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-14, 21-17 என்ற செட் கணக்கில் சுபாங்கர் தேசாயை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீகாந்த்-ஹெச்.எஸ்.பிரணாயும் மோதும் போட்டி மதியம் 2.45 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இன்று மாலை 6 மணி அல்லது அதற்குப் பிறகு சாய்னா - சிந்து மோதும் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT