செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறுவாரா ஜடேஜா?

DIN

இந்திய சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் பிரிவுகளில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 155 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 1136 ரன்களை எட்டியுள்ளார். இதனால், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜடேஜாவை விட 12 புள்ளிகள் மட்டும் அதிகமாக இருக்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசனை விட ஜடேஜா 8 புள்ளிகளே பின்தங்கியுள்ளார்.
எனவே, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த இருவரையுமே பின்னுக்குத்தள்ளி, இரு பிரிவுகளிலும் முதலிடம் பெறும் வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் இதர வீரர்களைப் பொருத்த வரையில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கேப்டன் விராட் கோலி 6-ஆவது, லோகேஷ் ராகுல் 8-ஆவது, துணை கேப்டன் ரஹானே 9-ஆவது இடங்களில் உள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை விட ஒரு புள்ளி குறைவாக இருக்கும் கோலி, இந்தத் தொடரில் அதிரடி காட்டினால் வார்னரை கீழிறக்கி, முதல் 5 இடங்களுக்குள் முன்னேறுவார்.
இப்பட்டியலில் ஷிகர் தவன் 30, முரளி விஜய் 36, ரித்திமான்சாஹா 47-ஆவது இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில், அஸ்வின் 4-ஆவது இடத்தில் உள்ளார். முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் முறையே 19, 27, 29, 37-ஆவது இடங்களில் உள்ளனர்.
இந்தியாவுடன் மோதும் இலங்கை அணியை கணக்கில் கொண்டால், பேட்டிங் வரிசையில் திமுத் கருணாரத்னே 17-ஆவது இடத்திலும், தினேஷ் சண்டிமல் 20-ஆவது இடத்திலும் உள்ளனர். மேத்யூஸ் 24, நிரோஷன் டிக்வெல்லா 40, தில்ருவன் பெரேரா 78, லாஹிரு திரிமானி 113-ஆவது இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரங்கனா ஹெராத் 5-ஆவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தில்ருவன் பெரேரா 25, சுரங்கா லக்மல் 36, லக்ஷன் சண்டகன் 69, மேத்யூஸ் 81-ஆவது இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT