முகப்பு
செய்திகள்

வெற்றி மட்டுமே எங்கள் இலக்கு: விராட் கோலி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி...

Updated On : 15 நவம்பர், 2017 at 4:44 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:37 PM

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு தொடரும் மிக முக்கியமானது. இதில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்ட விரும்பவில்லை. எதிரணி யாராக இருந்தாலும் வெற்றி மட்டுமே எங்கள் இலக்காக உள்ளது. அதற்காக நாங்கள் கடுமையாக முயற்சி செய்வோம்.

Advertisement

அணியை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்த விரும்புகிறேன். அதைத்தான் அணியின் இதர வீரர்களும் விரும்புவர். ஏனென்றால் நாங்கள் அனைவரும் ஒரு அணியாக ஒரே திசையில் சரியாகப் பயணிக்கிறோம். எங்களின் இலக்கு சரியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அணியில் விளையாடும் 11 பேரும் தொடர்ந்து 45 ஓவர்கள் பேட் செய்வார்கள் என்றோ, 30 ஓவர்களுக்குப் பந்துவீசுவார்கள் என்றோ கூற முடியாது. இருப்பினும் அவ்வாறு தொடர்ந்து விளையாடும் வீரர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு போதிய அளவு ஓய்வு தேவை.

அப்போதுதான் அவர்களால் தொடர்ச்சியாக நன்கு விளையாட முடியும். எல்லோரும் தொடர்ந்து விளையாடுவது போன்றுதான் தோன்றும். ஆனால், களத்தில் யார் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதையும் ஆராய வேண்டும்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் 20 முதல் 25 வீரர்கள் எப்போதும் களமிறங்கத் தயாராக உள்ளனர். முக்கிய வீரர்கள் முக்கியப் போட்டிகளின் போது களமிறங்கி முழுத் திறமையை வெளிக்காட்ட வேண்டும். எனவே வீரர்களின் உடல்நிலை, மனநிலை சரியாக இருக்கும் நிலையில் அவர்கள் தயார்படுத்தப்பட்டு வாய்ப்புகள் சரியாக வழங்கப்படுகிறது என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.