ஹஃபீஸ் இடைநீக்கம்: ஐசிசி நடவடிக்கை
விதிமுறைகளை மீறிய வகையில் பந்து வீசியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹஃபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறிய வகையில் பந்து வீசியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹஃபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான இந்த நடவடிக்கை குறித்து, ஐசிசி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஹஃபீஸின் பந்துவீச்சு முறை விதிகளை மீறிய வகையில் இருந்ததாக போட்டி அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிமாக கையை சுழற்றி ஹஃபீஸ் பந்து வீசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரது பந்து வீச்சை ஆய்வு செய்தபோது, அவர் விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்தது. எனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
முகமது ஹஃபீஸ், இதே தவறுக்காக முன்பு 2 முறை இடைக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சர்வதேசப் போட்டிகளில் 12 மாதம் வரை பங்கேற்பதற்கு ஹஃபீஸுக்கு தடை விதித்தும் ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.