செய்திகள்

பெங்களூரு ஓபன்: 4-ஆவது சுற்றில் யூகி பாம்ப்ரி

DIN

பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய வீரர் சாய்ராம் பாலாஜியை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, வைல்கார்டு பிரிவில் நேரடியாக தகுதிபெற்ற இந்திய வீரர்கள் விஷ்ணு வர்தன், சுராஜ் பிரபோத் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தோல்வி அடைந்தனர்.
விஷ்ணு 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் மரியோ விலெல்லா மார்டினஸிடம் வீழ்ந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ஸ்வீடனின் எலியஸ் யமெர் 6-4, 6-7 என்ற செட் கணக்கில் சுராஜை வீழ்த்தினார்.
இதனிடையே, போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஸ்லோவெனியாவின் பிலாஸ் கவ்கிக், 6-2, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்செகோவினாவின் டோமிஸ்லாவ் பிகிக்கை வீழ்த்தினார்.
தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சாகேத் மைனேனி போட்டியிலிருந்து விலகினார்.
முன்னதாக, அவர் இந்திய வீரர் டி.சிங்கை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்ள இருந்தார்.
இரட்டையர் பிரிவு 2-ஆவது சுற்று ஆட்டத்தில், ஸ்வீடனின் எலியாஸ் யமெர்-இந்தியாவின் சுமித் நாகல் ஜோடியிடம் 6-4, 1-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-என் விஜய் சுந்தர் பிரசாந்த் வீழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT