செய்திகள்

ஆஷஸ் முதல் டெஸ்டில் அணியின் சரிவைத் தடுத்த கேப்டன் ஸ்மித்! இங்கிலாந்து 302 ரன்கள்!

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஸ்மித்தின் அரை சதத்தால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இங்கிலாந்து, முதல் நாள் முடிவில் 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 28, மொயீன் அலி 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறியது. இதனால் அந்த அணி 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் மலான் மட்டும் பொறுப்புடன் விளையாடி 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

இதையடுத்து விளையாட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது. தொடக்க வீரர் பேன்கிராப்ட் 7 ரன்களில் முதலில் வீழ்ந்தார். இதன்பிறகு தகுந்த இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து 35 ஓவர்களுக்குள் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 

அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் - மார்ஷ் மிகச்சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்கள். இருவருமே நிதானமாக ரன் எடுத்தார்கள். 112 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஸ்மித். 

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டாம் நாளின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 62 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 64, மார்ஷ் 44 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT