செய்திகள்

படிப்படியாக உச்சத்தைத் தொட்ட அஸ்வின்: சாதனை விவரங்கள்!

எழில்

31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் முறியடித்துள்ளார். லில்லீ இச்சாதனையை நிகழ்த்திய நவம்பர் 27 அன்று அஸ்வினும் அவருடைய சாதனையை முறியடித்தது ஆச்சர்யமான நிகழ்வு.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின்.

* 27 நவம்பர் 1981 - டென்னிஸ் லில்லீ 300-வது விக்கெட்டை எடுத்தார்.

* 27 நவம்பர் 2017 - அஸ்வின் 300 விக்கெட்டுகளை எடுத்து லில்லீயின் சாதனைகளை முறியடித்தார். 

அஸ்வின்

நவம்பர் 2011-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான அஸ்வின், அந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

விரைவான 50 விக்கெட்டுகள் - 8-வது இடம் (9 டெஸ்டுகள்)
விரைவான 100 விக்கெட்டுகள் - 6-வது இடம் (18 டெஸ்டுகள்) 
விரைவான 150 விக்கெட்டுகள் - 4-வது இடம் (29 டெஸ்டுகள்)
விரைவான 200 விக்கெட்டுகள் - 2-வது இடம் (37 டெஸ்டுகள்)
விரைவான 250 விக்கெட்டுகள் - முதல் இடம் (45 டெஸ்டுகள்)
விரைவான 300 விக்கெட்டுகள் - முதல் இடம் (54 டெஸ்டுகள்)

குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் 

அஸ்வின் - 54 டெஸ்டுகள் 

டென்னிஸ் லில்லீ - 56 டெஸ்டுகள் 

முரளிதரன் - 58 டெஸ்டுகள் 

ஹேட்லி - 61 டெஸ்டுகள்

இன்னிங்ஸ் அடிப்படையில் விரைவாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தவர்கள்

முரளிதரன் - 91 இன்னிங்ஸ்
அஸ்வின் - 101 இன்னிங்ஸ் 
டென்னிஸ் லில்லீ - 107 இன்னிங்ஸ்
ஹேட்லி - 110 இன்னிங்ஸ்
ஆலன் டொனால்ட் - 112 இன்னிங்ஸ்
டேல் ஸ்டேய்ன் - 113 இன்னிங்ஸ்

300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சாளர்கள் - தேவைப்பட்ட பந்துகள்

அஸ்வின் - 15636 பந்துகள்
ஷேன் வார்னே - 18501 பந்துகள்
முரளிதரன் - 18622 பந்துகள்
ஹெராத் - 19367 பந்துகள்
ஹர்பஜன் சிங் - 19876 பந்துகள்
அனில் கும்ப்ளே - 20664 பந்துகள்

டெஸ்டுகளில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 + விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

ஷேன் வார்னே - 1993, 1994, 1995
 
முரளிதரன் - 2000, 2001, 2002
 
அஸ்வின் - 2015, 2016, 2017

ஒரு வருடத்தில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்: இந்திய வீரர்கள்

3 - அனில் கும்ளே (1999,2004,2006)

3 - ஹர்பஜன் சிங் (2001,02,08)

3 - அஸ்வின் (2015,2016,2017)

300 டெஸ்ட் விக்கெட்டுகள்

சொந்த மண்ணில்

34 டெஸ்டுகள் - 216 விக்கெட்டுகள்

வெளிநாட்டில்

20 டெஸ்டுகள் - 84 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் இதர சாதனைகள்

5 விக்கெட்டுகள் - 26 தடவை
10 விக்கெட்டுகள்/டெஸ்ட் - 7 தடவை
ஆட்ட நாயகன் - 7 தடவை
தொடர் நாயகன் - 7 தடவை

* இன்று, பெராராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். டெஸ்ட் - 300, ஒருநாள் - 150, டி20 - 52 என இதுவரை 502 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT