செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்!

எழில்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நாகபுரி டெஸ்ட் போட்டியில் புஜாரா 14 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

941 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் இதுவரை அதிகப் புள்ளிகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பீட்டர் மே-யுடன் இணைந்து 5-ம் இடம் பிடித்துள்ளார் ஸ்மித். இதற்கு முன்பு பிராட்மேன் (961), லென் ஹட்டன் (945), ஜேக் ஹாப்ஸ் (942), ரிக்கி பாண்டிங் (942), பீட்டர் மே (941) ஆகியோர் அதிகப் புள்ளிகள் பெற்ற வீரர்கள். 

இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும் இந்தியாவின் விராட் கோலி 5-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ஜடேஜா, ரபடா, அஸ்வின், ஹெராத் ஆகியோர் உள்ளார்கள்.

அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT