செய்திகள்

22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

எழில்

பளு தூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மிராபாய் சானு உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் 23 வயது மிராபாய் சானு, மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, ஸ்னாட்ச்-ல் 85 கிலோ, கிளீன் & ஜெர்க்-ல் 109 கிலோ என மொத்தமாக 194 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மிராபாய், கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றார். காரணம், கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் படுதோல்வி அடைந்தார். அதற்குப் பிறகு தற்போது உலக சாதனை படைத்துத் தங்கமும் பெற்றதால் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

22 வருடங்களுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி, 1994, 95 வருடங்களில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளீல் 54 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றார். அதன்பிறகு, மிராபாய் சானு தற்போது தங்கம் வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT