செய்திகள்

'ஏ' அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்: நியூஸிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது இந்தியா

DIN

நியூஸிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய 'ஏ' அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய 'ஏ' அணி கைப்பற்றியது.
முன்னதாக, இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 69.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் காலின் மன்ரோ அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஷர்துல் தாக்குர், கரன் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 110 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 447 ரன்கள் குவித்தது. அணியில் அங்கீத் பாவ்னே அதிகபட்சமாக 162 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் ஐஷ் சோதி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து 4-ஆவது நாளில் 79.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி நிக்கோலஸ் அதிகபட்சமாக 94 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக கரன் சர்மா 5, ஷாபாஸ் நதீம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT