செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக தோற்ற அணியா இது? டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி!

எழில்

இந்திய அணிக்கு எதிராக 3-0 என தோல்வியுற்ற இலங்கை அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 159.2 ஓவர்களில் 482 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கருணாரத்னே 196 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 90.3 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அசார் அலி 59, ஹாரீஸ் சோஹைல் 56 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 26 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளையும், ஹாரீஸ் சோஹைல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

317 ரன்கள் இலக்கு: இதையடுத்து 317 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 4-வது நேற்று திங்கள்கிழமை 56 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. ஆசாத் ஷபிக் 86, கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது 57 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் வெற்றி பெற 119 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கடைசி நாளன்று ஆசாத் ஷபிக் 151 பந்துகளில் சதம் எடுத்து பாகிஸ்தான் ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஆனால் அடுத்தச் சில ஓவர்களில் சர்ஃப்ராஸ் அஹமது பெரேரா பந்துவீச்சில் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது அமீர் 4 ரன்களில் வெளியேறினார். பிறகு 3 பந்துகளின் இடைவெளியில் யாசிர் ஷா (5 ரன்கள்), ஆசாத் ஷபிக் (112 ரன்கள்) விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். இதனால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. இதையடுத்து 90.2 ஓவர்களில் 248 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டெஸ்டையும் வென்றுள்ளது. இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றுள்ளது இலங்கை அணி. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என வென்றுள்ளது இலங்கை ரசிகர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT