செய்திகள்

முடிவுக்கு வந்தது சச்சின் டெண்டுல்கர் - டிவிட்டர் பஞ்சாயத்து! 

DIN

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வேண்டுகோளினை ஏற்று அவரது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை டிவிட்டர் நிர்வாகம் செயல் இழக்கச் செய்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா. இதில் அர்ஜுன் அவரது தந்தையைப் போன்றே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி, தற்பொழுது வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார். மகள் சாரா நடிப்பில் ஆர்வம் காட்டி, அதற்கென பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டின் துவக்கத்தில் அர்ஜுன் மற்றும் சாரா இருவரது பெயரிலும் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் கணக்குகள் துவங்கப்பட்டு, ட்வீட்டுகள் வெளிவந்தன. ஆனால் சச்சின் உடனடியாக அவற்றை மறுத்ததோடு, அவை போலி கணக்குகள் என்றும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் டிவிட்டருக்கு  வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவை அப்பொழுது நீக்கப்படவில்லை.

இந்நிலையில் சச்சின் நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர், 'எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா டிவிட்டரில் இல்லை என்பதனை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிவிட்டருக்கு நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக உடனடியாக வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், 'இத்தகைய போலி கணக்குகளால் பெரும் பாதிப்பு உண்டாகிறது.  நிறைய தவறான புரிதல்கள் உண்டாகிறது. இதன் விளைவுகள் எங்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது' என்று பதிவிட்டு தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் வேண்டுகோளினை ஏற்று, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய டிவிட்டர் நிர்வாகம், சச்சினின் வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை உடனடியாக செயல் இழக்கச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT