முகப்பு
செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்த விராட் கோலியும் மிதாலி ராஜும்!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆண்கள், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆண்கள், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 10 நாள்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸிடம் முதலிடத்தை இழந்த கோலி, நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 263 ரன்கள் குவித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இதுதவிர 889 ரேட்டிங் புள்ளிகளையும் எட்டியுள்ளார். இதன்மூலம் அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகளை பெற்ற இந்தியர் என்ற சாதனை அவர் வசமானது. முன்னதாக சச்சின் 1998-இல் 887 ரேட்டிங் புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்தது. அதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமன் செய்த கோலி, இப்போது தகர்த்துள்ளார்.

அதேபோல மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ஓர் இடம் முன்னேறி 753 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் மூன்று இடங்களை இழந்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. அதன் காரணமாக இப்போது சரிவைச் சந்தித்துள்ளார்.

முதலிடம் பிடித்த கோலி, மிதாலி ராஜ் ஆகிய இருவருக்கும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →