செய்திகள்

அமெரிக்க ஓபன்: ரஃபேல் நடால் சாம்பியன்!

எழில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்துக்கான இறுதிச்சுற்றில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நடாலும், உலகின் 32-ஆம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் மோதினர். 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடால் வென்று அமெரிக்க ஓபன் போட்டியின் சாம்பியன் ஆனார். 

இறுதிச்சுற்றில் மோதிய நடால் - கெவின் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவை அனைத்திலுமே நடால் வெற்றி பெற்றுள்ளார். 

நடாலின் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் இது 16-வது பட்டமாகும். அதேவேளையில், இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதற்கு முன்பு பிரெஞ்சு ஓபனை வென்றார். மேலும் இது அவருடைய மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT