செய்திகள்

பாட்மிண்டன் தரவரிசை: சமீர், பிரணீத் முன்னேற்றம்

DIN

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சமீர் வர்மா, சாய் பிரணீத் ஆகியோர் தலா ஓர் இடம் முன்னேறி முறையே 16 மற்றும் 25-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
கொரிய ஓபனில் இருந்து விலகிய மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் ஓர் இடம் சறுக்கி 17-ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் 8-ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். எச்.எஸ்.பிரணாய் தொடர்ந்து 18-ஆவது இடத்தில் இருக்கிறார். மகளிர்பிரிவைப் பொறுத்தவரையில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோரின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் இருவரும் முறையே 4 மற்றும் 12-ஆவது இடங்களில் உள்ளனர்.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஓர் இடத்தை இழந்து 25-ஆவது இடத்திலும், கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தொடர்ந்து 20-ஆவது இடத்திலும் உள்ளன. ஆடவர் இரட்டையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் முதல் 25 இடங்களில் இந்திய ஜோடிகள் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT