செய்திகள்

பி.வி. சிந்துவுக்கு பத்ம பூஷண்: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பெயரை, இந்தியாவின் 3-வது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு...

எழில்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பெயரை, இந்தியாவின் 3-வது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமைப் பணி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், வருகிற 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு பி.வி. சிந்துவின் பெயரை விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியி; வெள்ளிப் பதக்கம் பெற்றார் சிந்து. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இரு முக்கியமான போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றதால் சிந்துவின் பெயர் பத்ம பூஷன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT