முகப்பு
செய்திகள்

புது இன்னிங்ஸ் துவங்கிய ஆஷிஷ் நெஹ்ராவுக்கு சேவாக் வரவேற்பு

புதிய அத்தியாயம் தொடங்கிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு சேவாக் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 16 நவம்பர், 2017 at 5:58 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:38 PM

இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. காயங்களால் அவதிப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்குத் திரும்பும் திறன் பெற்றவர்.

சர்வதேச அரங்கில் சுமார் 18 வருடங்களாக விளையாடினாலும் தொடர் காயம் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 உட்பட அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 164 போட்டிகளில் மட்டுமே விளையாடி 235 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த நியூஸிலாந்து டி20 தொடருடன் தனது 38-ஆவது வயதில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 

Advertisement

இந்நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா புது அத்தியாயமாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான இந்த டெஸ்ட் தொடர் முதல் தொலக்காட்சி வர்ணனையாளராக களமிறங்கினார் ஆஷிஷ் நெஹ்ரா. அதற்கு, ''நெஹ்ரா ஜீ வர்ணனையாளராக களமிறங்கியுள்ள உங்களை வரவேற்கிறேன்'' என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

சேவாக் மற்றும் நெஹ்ரா ஆகியோர் ஆரம்ப காலத்தில் தில்லி அணி மற்றும் இந்திய அணிக்காக ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.