முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வெற்றி

126 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் 15.5 ஓவரில் 127 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 11:15 PM
பகிர்:

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக சஞ்சூ சாம்சன் 49, ஷ்ரேயாஸ் கோபால் 18 , அஜிங்க்ய ரஹானே 13 ரன்கள் எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய சித்தார்த கௌல் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 126 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் 15.5 ஓவரில் 127 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.
அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன் 77, கேன் வில்லியம்சன் 36, ரித்திமான் சாஹா 5 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.