செய்திகள்

ஆசிய கிரிக்கெட் கோப்பை: இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

எழில்

இந்தியாவில் நடைபெறவிருந்த 2018 ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலில் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. எனில், பாகிஸ்தான் அணி கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் 13 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு போட்டி நடத்தப்பட்டு அதில் வெல்லும் அணி ஆசிய கோப்பைப் போட்டியில் ஆறாவது அணியாகப் பங்குபெறும். 

2016-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT