காமன்வெல்த்: பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் மோதும் சாய்னா & சிந்து!
காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்....
காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற அரையிறுதிகளில் சிந்து 21-18, 21-8 என்ற கணக்கில் கனடாவின் மிச்செல்லேவை வென்றார். சாய்னா 21-14 18-21 21-17 என்ற செட்களில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரை வென்றார். இதையடுத்து இறுதிச்சுற்றில் சாய்னா - சிந்து மோதவுள்ளார். இதனால் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கமும் வெள்ளியும் உறுதியாகியுள்ளன.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் ராஜிவ்வை 21-10 21-17 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவர், மலேசியாவின் லீ சோங்கை இறுதிச்சுற்றில் எதிர்கொள்ளவுள்ளார்.