முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: 25-வது தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி பெறும் 25-வது தங்கப் பதக்கம் இது. பதக்கப்பட்டியலில் 57 பதக்கங்களுடன் 3-ம் இடத்தில் நீடிக்கிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

குத்துச்சண்டைப் போட்டியில் ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் தங்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கேமரூனின் வில்ஃப்ரைடைத் தோற்கடித்து தங்கம் வென்றார்.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி பெறும் 25-வது தங்கப் பதக்கம் இது. பதக்கப்பட்டியலில் 57 பதக்கங்களுடன் 3-ம் இடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.