செய்திகள்

காமன்வெல்த் 2018: 3-ஆம் இடம்பிடித்த இந்தியா!

Raghavendran

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 5-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 

இந்தியா சார்பில் 226 பேர் அடங்கிய குழுவினர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், தடகளம், ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய அணியினர் பதக்கங்களை குவித்தனர். 

இதன்மூலம் 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 3-ஆம் இடம் பிடித்தது. 11 நாட்கள் நடந்த இப்போட்டியின் நிறைவு விழா கார்ரா மைதானத்தில் நடக்கிறது. 

இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும் நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்கிறார். தொடக்க விழாவில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியேந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT